/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/subiksha.jpg)
நபீஹா புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில், நுபாஸ்ரகுமான் 'சர்க்கரை தூக்கலா ஒரு புன்னகை' என்ற படத்தை தயாரித்துள்ளார்.இயக்குநர் மகேஷ் பத்மநாபன் இயக்கும்இப்படத்தில், கதாநாயகனாகருத்ரா நடிக்க, கதாநாயகியாக சுபிக்ஷா நடித்துள்ளார். ‘ராட்சசன்’ வினோத் சாகர், பீட்டர், கணபதி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் வரும் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழு இறங்கியுள்ளது,
இந்நிலையில், படத்தை விளம்பரப்படுத்தும்நிகழிச்சிகளில்நடிகை சுபிக்ஷா கலந்துகொள்ளவில்லை என படக்குழு வேதனை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக படத்தின் நாயகன் ருத்ரா கூறுகையில், "கதாநாயகிகள் நடிக்க ஒப்பந்தம் செய்யும்போது அக்ரிமென்டில் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வருவோம் என்று கையெழுத்து போட்டாலும், பெரும்பாலும் அதைக் கடைப்பிடிப்பதில்லை. அந்த வகையில் 'கடுகு' படத்தில் நாயகியாக நடித்த சுபிக்ஷா, இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வருமாறுதயாரிப்பாளரும், இயக்குநரும், நானும் மாறி மாறி அழைத்தும் வரவில்லை.‘நான் வெளியூரில் படப்பிடிப்பில் இருக்கிறேன்’ என்று ஏமாற்றுகிறார். இதற்கிடையே, இசை வெளியீடு முடிந்து தற்போது படம் வருகிற 31ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் புரமோஷன்களில் கலந்துகொண்டு படத்திற்கு ஆதரவு தருமாறு கேட்டும் வர மறுக்கிறார். அவருக்கு எந்த ஒரு சம்பள பாக்கியும் இதுவரை வைக்கவில்லை. இருந்தும் இதுபோல் நடந்துகொள்கிறார். என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. இது சம்பந்தமாக நடிகர் சங்கத்தில் புகார் அளிக்கப் போகிறோம். இப்படத்தை உருவாக்க நாங்கள்பெரும் கஷ்டப்பட்டிருக்கிறோம், அதற்குப் பலனாகத்தான் ‘சர்க்கரை தூக்கலா ஒரு புன்னகை’ படத்திற்கு 8 விருதுகள் கிடைத்துள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)